29 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் லூக்கா நற்செய்தியை 17:10
தேவனுடைய சித்தம் செய்வது, நம்முடைய கடமையாய் இருக்கிறது. ஏனெனில், அவர் நம்மை சிருஷ்டிக்காதிருந்தாராகில் நாம் இருந்திருக்கவே முடியாது. தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருவதற்கோ, அல்லது அவருடைய வேலையை செய்வதற்கோ நம்மில் ஒருவரும் தேவனுக்கு இன்றியமையாதவர்கள் அல்ல. மேலும் நாம் செய்வதைப்போல, வேறொருவராலும் செய்யக்கூடும். தேவனுக்காக வேலை செய்யக்கூடிய வாய்ப்பு நம்முடைய நன்மைக்கேதுவானவைகள் தான். அதினால் பயனடைபவர்களும் நாமே. ரோமர் 3:12

