9 ஏப்ரல்க்கான தினசரி வேத தியானம்
பந்தயச்சாலையில் ஓடுகிறவர்கள் எல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 9:24
பரிசைப் பெறுவதற்கு நாம் தேவனின் சர்வாயுதம் தரித்தவர்களாக மட்டும் இருந்தால் போதாது, நாம் யுத்த வீரர்களாயிருந்து கண்களின் இச்சைகளையும், மாமிசத்தின் இச்சைகளையும், ஜீவனத்தின் பெருமைகளையும், பரிசுத்தத்திற்கும், நீதிக்கும் பகைமையாக உள்ள சகல காரியங்களையும் எதிர்த்து நல்ல போர் வீரனாக போர் புரியவும் வேண்டும். தேவனுக்கும், சத்தியத்திற்கும், நீதிக்கும் காட்டும் அன்பு நம்மை உற்சாகப்படுத்த வேண்டும். இல்லையேல் வெற்றி காண முடியாது. அன்பே நம்மை மரண பரியந்தம் விசுவாசத்தில் நிலைத்திருக்கச் செய்யும் ஊக்கமான அன்பு நம் இருதயங்களை ஆளும் போது நம் தேவனுக்கு முற்றிலும் நம்மை ஒப்புக் கொடுத்து பத்தில் ஒன்பது பாகம் நம் பேரில் வெற்றியடைந்ததாகக் காணச் செய்யும். அன்பு நிறைந்திருக்கும் போது, தேவனுடைய கிருபையும் நிறைந்திருக்கும். (யூதா 20:21) Reprints Reference 1799:4 R1799

