2 ஜூன்க்கான தினசரி வேத தியானம்
இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மனித்திருந்தேன். கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 2:2
பிரதிஷ்டை பண்ணின ஒவ்வொருவரும் சுவிசேஷத்தை ஏற்றுக் கொண்டவர்களாக இருக்கும் போது தங்களுடைய அதிகமான நேரங்களையும், எண்ணங்களையும் அந்த சுவிசேஷ ஊழியத்திற்கே அதிகமாகச் செலவிட நினைத்து மற்ற உலக காரியங்களை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். நாம் அறிவிலே பூரணப்பட்டிருக்கும் போது, வரும் காலத்திற்குரிய வாழ்க்கையை நாம் பெற்றவர்களாகக் காணப்படுவோம். இந்த சுவிசேஷ ஊழியத்தை, அசட்டையாக எண்ணக்கூடியவர்கள், அதிகமாக தேவனுடைய பாதைகளிலிருந்து விலகி உலக மார்க்கத்தில் செல்ல, பல வகையிலும் இழுப்புண்டு, இவர்கள் அழைக்கப்பட்ட அழைப்பையும் தங்களுக்கான மேலான பரிசையும் இழக்க நேரிடும். (கலா. 6:14) Reprints Reference 1811:5 R1811

