21 ஜூன்க்கான தினசரி வேத தியானம்
நான் சாந்தமும், மனத்தாழ்மையுமாயிருக்கிறேன் ...... என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். மத்தேயு நற்செய்தியை 11:29
உண்மையாகவே மனத்தாழ்மையும், அமைதலுமான ஆவியில் தான் இளைப்பாறுதல் உண்டு. மனத்தாழ்மையின் மூலமாகவே பொறுமையை நாம் வளர்க்கச் செய்து, தேவசித்ததிற்கு நம்மை முற்றிலும் கீழ்ப்படுத்தவும் முடியும். அவர் அன்பில், நாம் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கும் போது, அவர் ஞானத்திலே நாம் வழி நடத்தப்பட்டு சகலத்தையும் மேற்கொள்ளுவோம். இப்பாதையில் தொடர்ந்து நாம் நடக்க நம்மை ஒப்புக் கொடுப்போமேயாகில், பல தீமைகளுக்கிடையே சமாதானத்துடன் அவர் தயவைப் பெற்று ஜீவிக்க முடியும். தேவனுடைய பிள்ளைகள் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி தாழ்மையிலும், சாந்தத்திலும் தேவ சித்தத்திற்கு தங்களை ஒப்புக் கொடுத்து அவருடைய நுகத்தை நாம் ஏற்றுக் கொண்டால் அவரே நம்மைச் சகலத்திலும் வழி நடத்துவார். (கொலோ. 3:12-17; 1 தீமோ. 6:11-12) Reprints Reference 1962:1 R1962

