8 ஜூன்க்கான தினசரி வேத தியானம்
தப்பிப் போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகின்றவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். யாக்கோபுஎழுதிய திருமுகம் 5:20
ஒருவன் தவறான மார்க்கத்தில் நடப்பதை நாம் காணும் போது, நாம் அவர்களை இரட்சிப்பதற்காக அவர்கள் பாதையில் நடவாமல் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். நாம் சரியான பாதையில் நின்றுக் கொண்டு, அவர்களை மனந்திரும்பும்படி அழைக்க வேண்டும். ஒரு சிலர் பலவிதமான குழப்பமுள்ள போதகங்களால் அவர்களை அலைக்கழிக்கும் போது, அது தவறு என்று உணர்ந்தவர்களாகிய நாம் அப்போதகங்களைக் குறித்து ஆராய்ச்சி செய்யத் துவக்காமல் அவைகள் உண்மைச் சத்தியத்திற்கு மாறானவைகள் என்று உணர்த்திக் காண்பிப்பது மட்டுமே அவசியமானது. நம் இரட்சகரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ஜீவிப்பதே அல்லாமல் வேறு எந்த வழியும் போதிக்கப்பட வில்லை. அடிப்படை விசுவாசத்தை விட்டு விலகாதிருக்கப் போதித்து, புத்தி சொல்ல வேண்டும். (1 பேது. 4:7-10) Reprints Reference 1860:3 R1860

