8 ஜூன்க்கான தினசரி வேத தியானம்
... ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்றும், எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கப்படும் எபேசியருக்கு எழுதிய திருமுகம் 3:11
ஒரு மாபெரும் சிற்பியின் நிறைவு பெறாத வேலையைப்பார்த்து அவருடைய ஞானம் மற்றும் திறமையை அறியாமையில் சிலர் தவறாக மதிப்பிடுவது போன்றே, தேவனுடைய நிறைவு பெறாத திட்டத்தைக் குறித்தும் சிலர் தவறாக மதிப்பிடலாம். ஆயினும் ஏற்றகாலத்தில் அனைவரும், யுகங்களைக் குறித்தான தேவனுடைய மாபெரும் திட்டம் உண்மையில் கால அட்டவணையின்படியே தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று அறிந்துகொள்வார்கள், தேவனை சிற்பியாக கொண்ட இந்த திட்டம், மனிதனுடைய சிருஷ்டிப்பில் ஆரம்பித்து, வரைமுறையற்ற எதிர்காலத்திற்குள் சென்றடையும். எபிரெயர் 12:2

