2 மேக்கான தினசரி வேத தியானம்
அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ பக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள். திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 3:12
நம்முடைய ஓட்டத்தை மரணத்திலே நாம் முடிக்கும் காலம் வரை எதிர்ப்பை நாம் எப்பொழுதும் எதிர் நோக்கி இருக்க வேண்டும். சத்தியத்தின் நிமித்தமாக இப்படிப்பட்ட எதிர்ப்பை பொறுமையுடன் சகித்து அன்பினிமித்தமாகவும், சிநேகத்தினிமித்தமாகவும், சகல கடினமான காரியங்களையும் மேற்கொள்ள பிரயாசப்படவேண்டும். அதோடு ராஜ்ய ஊழியத்தில் தேவ சித்தத்தை நிறைவேற்ற இவைகளை சகிக்கவும் வேண்டும். தேவ ராஜ்ய சேவையிலே நாம் முற்றிலும் நம்மை உட்படுத்த, முதலாவது ஜாக்கிரதையுடன் தொடர்ந்து தேவ திட்டங்களை அறியவேண்டும்.இரண்டாவதாக ஆர்வத்துடன் அதின் முக்கியத்துவத்தை ஆவியில் உணர்ந்து கொள்ள வேண்டும். மூன்றாவதாக இவைகளை நிறைவேற்ற ஊக்கமும், உற்சாகமுடையவர்களாக சகல தியாகங்களையும், உழைப்பையும் கொடுத்து செயல்படவேண்டும். (1பேது. 1:5-7; 2:19-21) Reprints Reference 3199:2 R3199

