21 மேக்கான தினசரி வேத தியானம்
வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையும் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும் படியாக, அவைகள் உபதேசத்திற்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 3:16, 17
ஆவியின் கிருபையால் நாம் தேவனை அறிகிற அறிவிலே முன்னேற, வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டிலும், கிறிஸ்துவின் மூலம் சொல்லப்பட்ட வார்த்தைகளும், அப்போஸ்தலர்கள் மூலமாக எழுதப்பட்டவைகளும் மிக அவசியமானதென்பதை நாம் நினைவு கூற வேண்டும். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இரட்சிப்பை நாம் அடைய வேறெந்த வழியும் நமக்குக் கட்டளையிடப்படவில்லை. இந்த வார்த்தைகள் நம் அனுதின வாழ்க்கையில் நம்மைச் சீராக நடத்தவும், தவறுகளை நமக்கு எடுத்துக் காட்டவும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இரட்சிப்பைப் பெறுவதற்கு தயார் செய்கிறதாயிருக்கிறது. (2 பேது. 1:19-21; ரோம. 15:4) Reprints Reference 2166:2 R2166

