9 மேக்கான தினசரி வேத தியானம்
நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்து கொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக. கொலோசையருக்கு எழுதிய திருமுகம் 2:6, 7
தவறான போதனைகளைப் போதித்துவரும் போதகர்களின் கருத்து யாதெனில் சத்தியத்தில் தங்கள் விசுவாசத்தை நிலைநாட்டுவது அவசியமானது அல்ல என்றும், அவற்றில் நிலைத்திருக்க வேண்டும் என்பது மத வைராக்கியமே என்றும் கூறி வருகின்றனர். எதையும் ரூபகாரப்படுத்தக் கூடாமலிருந்தும், வேதத்திற்கு முரணாகப் பேசி பிடிவாதமாகத் தங்கள் கொள்கைகளைப் பேசி வருகின்றனர். தேவ வார்த்தைகளை உள்ளபடி ஏற்றுக் கொண்டவர்கள், விசுவாசத்தின் மூலமாக மத வைராக்கியம் உள்ளவர்கள் ஆவர். இவர்களே சத்தியத்தில் வேர் கொண்டு நிலைத்திருப்பவர்கள். பலமும் உறுதியுமுள்ள ஒரு விசுவாசிக்கும், மற்ற மத வைராக்கியம் உள்ளவருக்குமுள்ள வித்தியாசம் யாதெனில் ஒருவன் சத்தியத்திலே வேரூன்றி நிலைத்திருக்கிறான். மற்றவன் தவறான கொள்கையில் ஸ்திரப்பட்டிருக்கிறான். (எபே. 3:16-19) Reprints Reference 3215:2 R3215

