1 மேக்கான தினசரி வேத தியானம்
மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார். மத்தேயு நற்செய்தியை 20:28
நாம் நம்மைத் தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்த பிறகு புதிய சிருஷ்டிகளாக பலியின் ஜீவியத்தில்,ஒவ்வொரு காரியத்திலும் நீதியுள்ளவர்களாக நம்முடைய சொந்த காரியத்திலோ, அல்லது கணவனுக்காகவோ, மனைவிக்காகவோ, தாய் தகப்பனுக்காகவோ, கிறிஸ்துவுக்குள் அழைக்கப்பட்ட சகோதரர்களுக்காகவோ செய்யும் போது தேவனுடைய பார்வையில் அதை அவருக்கே நாம் செய்கிறோம். அநீதிமான்களாக இருந்து நாம் எதைச் செய்தாலும் தேவனுக்கு உண்மையான பலிகளைச் செலுத்தக்கூடிய ஆசாரியர்களாயிருக்க முடியாது. (கிறிஸ்து அநேகரின் பாவங்களை சுமந்து தம்மை தேவனுக்கு சுகந்த பலியாக ஒப்புக் கொடுத்தது போல அவரைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் அநேகருக்காக தங்கள் முழு நேரங்களையும் பிரயாசைகளையும் மனத்தாழ்மையுடன் அர்ப்பணிக்க வேண்டும்.) (யோவா: 13:13-17) Reprints Reference 3266:4 R3266

