14 டிசம்பர்க்கான தினசரி வேத தியானம்
இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். மத்தேயு நற்செய்தியை 5:7
தேவ சாயலுக்குரிய குணலட்சணங்களான இரக்கம், தயவு, தர்ம சிந்தை ஆகியவை மனிதன் பயிற்சிக்க வேண்டிய நற்குணங்களாகும். நம் இரட்சகர் இரக்கக்குணத்தை அதிகம் வற்புறுத்துகிறார். நாம் எவ்வளவாக அறிவைப் பெற்றிருந்தாலும் அல்லது கிருபை நிறைந்தவர்களாக இருந்தாலும், இரக்கமுடைய மனதையுடையவர்களாக இராவிட்டால், தேவனுடைய பார்வையில் அங்கீகரிக்கப்பட்டவர்கள் அல்ல. நாம் மற்றவர்களுக்கு இரங்காவிட்டால் பரமபிதா நம்மேல் இரக்கம் கொள்ளார். வெளித் தோற்றமான இரக்கம் இரக்கமல்லவென்றும், உள்ளான இருதயத்தோடு ஒருவர் குற்றத்தை ஒருவர் மன்னியாவிட்டால், பரம பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னிக்க மாட்டார் என்று இரட்சகர் கூறினார். இரக்கம் காண்பிப்பவர்களே இரக்கம் பெறுவர். (லூக். 6:35- 38) Reprints Reference 2896:3; 2587:1 R2587

