2 அக்டோபர்க்கான தினசரி வேத தியானம்
பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி...... இலக்கை நோக்கித் தொடருகிறேன். பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 3:13
நாம் விட்டுவந்த பின்னான காரியங்களை நாம் மறக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். இது தேவ சித்தமாயிருக்கிறது. தேவன் நம்முடைய எல்லாப் பாவங்களையும், அக்கிரமங்களையும் மன்னித்து, அவைகளைத் தமக்குப் பின்னாக எறிந்து விட்டார். நம்முடைய இரட்சகரின் மரணத்தின் மூலம் நம் பாவங்கள் மூடப்பட்டு விட்டது. இது முதற்கொண்டு அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடப்பவர்கள் தாங்கள் விட்டு வெளியேறிய மாமிசக் காரியங்களை மீண்டும் பின்பற்றக் கூடாது. மாமிசம் பெலவீனமானது. ஆகையால் நம்முடைய அனுதின வாழ்க்கையில் ஏற்படும் தவறுதல்களுக்காக, கிறிஸ்துவின் மூலம் தேவனிடம் மன்றாடி மன்னிப்பைக் கேட்க கடமைப் பட்டுள்ளோம். நமக்குமுன் வைக்கப்பட்டுள்ள பரிசை நோக்கி தொடர்ந்து முன் நோக்கி ஓடக் கடவோம். (லோத்தின் மனைவியை நினைவில் கொள்வோமாக.) (லூக். 9:59-62) Reprints Reference 3306:2 R3306

