7 அக்டோபர்க்கான தினசரி வேத தியானம்
நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின் மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். மத்தேயு நற்செய்தியை 7:26
கிறிஸ்துவின் வாக்குத்தத்தங்களின் பேரில் நம்பிக்கையாக இருந்து, தன் கிரியைகளில் ஒன்றுமில்லாதவன், மணலின் மேல் தன் நம்பிக்கையைக் கட்டினவனாகக் காணப்படுவான். சோதனையின் நாளிலே வெகுசீக்கிரத்தில் அவன் விழுந்து போவான். அவன் நம்பிக்கை யாவும் ஒன்றுமில்லாமல் போகும். அவருடைய இராஜ்யத்தில் பங்கு பெற விரும்பும் ஒவ்வொருவரும், கீழ்ப்படிதலுடன் தங்கள் இருதயங்களையும், நாவையும் காத்து கிரியையுடன் தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்டதை விசுவாசத்துடன் செய்து முடிக்க வேண்டும். நற்கனிகளைத் தரக்கூடியவர்களாகக் காணப்படும் போது, எவ்வளவு பலமுள்ள காற்றுகளான சோதனைகள் இவர்களை நெருக்கினாலும், அசைக்கப்படாத மரங்களைப் போலிருப்பார்கள். ஏனெனில், இவர்கள் உறுதியான அஸ்திபாரத்தின் மேல் இருக்கிறவர்கள். (யாக். 2:17-22) Reprints Reference 3318:5 R3318

