13 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவம் செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். யோவான் எழுதிய முதல் திருமுகம் 2:1
நம்முடைய மாமிச பலவீனத்தினாலோ, விசுவாச பலவீனத்தினாலோ நாம் தவறி, பிதாவின் சித்தத்திற்கு மாறாக எதையும் செய்வோமேயானால், அவைகளை உணர்ந்தபின் நம்மை அழைத்து வழி நடத்துகிற தேவனிடம் உடனடியாக மன்றாடி ஜெபித்து நம் வழிகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். ஆபிரகாம் பலியிட்ட நிழலான மிருக பலிகளின் பலிபீடத்தைக் காட்டிலும் மேலான, கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தின் பலிபீடம் நமக்கு இருக்கிறது. “நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ் செய்யும் கிருபையை அடையவும், தைரியமாய் கிருபாசனத்தண்டையில் சேரக்கடவோம்” என்று அப்போஸ்தலர் நமக்கு புத்தி கூறுகிறார். (எபி. 4:16) Reprints Reference 2848:3 R2848

