18 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
0:00 / …
அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள். உரோமையருக்கு எழுதிய திருமுகம் 12:11
தேர்ச்சி பெற்றவர்களாக ஓட்டப் பந்தயத்தில் ஓட விரும்பும் யாவரும் மிகவும் ஜாக்கிரதையுள்ளவர்களாக உற்சாகத்துடன் தேவ ஊழியத்தில் ஈடுபட வேண்டும். நமக்கு கொடுக்கப்பட்ட தாலந்தை ஆவிக்குரிய காரியங்களுக்கு உபயோகப்படுத்தாமல், உலக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் அதை புதைத்து வைப்போமாகில் அவிசுவாசமுள்ள ஊழியக்காரனைப் போல நாமும் புறம்பான இருளிலே போகக் கூடியவர்களாக காணப்படுவோம். ஆவியில் அனலில்லாதவர்கள் மரித்தவர்களுக்கொப்பானவர்கள். விழிப்புடன் உற்சாகத்தோடு தேவ ஊழியத்தில் ஈடுபடும் போது நாம் பிரகாசிக்கிற விளக்குகளாக காணப்படுவோம். (அப். 18:24-25; வெளி. 3:15-16) Reprints Reference 1282:5 R1285

