18 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாய் இருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்கு கவனமாய் இருக்கிறது பேதுரு எழுதிய முதல் திருமுகம் 3:12
நம்முடைய மீட்பராக இயேசுவில் விசுவாசம் வைத்து, தேவனிடத்தில் நம்முடைய இருதயங்களைக் கொடுக்கும் போது, அவர் எப்போதும் நமக்கு செவிக் கொடுக்கிறார் என்பதை அறிந்து ஜெபத்தில் நம்முடைய பரமபிதாவிடம் செல்லும் சிலாக்கியத்தை நமக்கு கொண்டு வருகிறது. இயேசுவின் பின்னடியார்கள், நீதிமான்கள் என்று அழைக்கப்படுகின்றனர். காரணம், இயேசு, தம்முடைய நீதியினால் அவர்களுடைய அபூரணங்களை மூடுகிறார். தேவன், நம்முடைய ஜீவியத்தில் ஒவ்வொரு கஷ்டமான சூழ்நிலைகளும் எடுத்து மாற்றப்படும் என்று தேவன் வாக்களிக்காவிட்டாலும், அவர் நம்மோடு இருந்து சகிப்பதற்குத் தேவையான பெலனை நமக்கு அருளுவார். தானியேல் 10:2.

