20 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? எபிஎபிரேயருக்கு எழுதிய திருமுகம் 12:7
உபத்திரவங்களும் சோதனைகளுமின்றி ஒருவன் தன் வாழ்க்கையிலே பூரணப்படுவது அரிது. இது ஓர் இளஞ்செடிக் கொப்பானது. தேவ அன்பெனும் சூரிய ஒளி இது வளர்வதற்கு அவசியமானது. அவர் கிருபையின் தண்ணீர் அதற்கு அனுதினமும் ஊற்றப்பட வேண்டும். இவ்விதம் விசுவாசத்தின் அடிப்படையில் வளரும் போது ஒழுங்காக வளர்ந்து நற்கனிகளைத் தர இதன் கிளைகள் ஒடிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட வேண்டும். இந்த சிட்சைகளின் மூலம் இந்த செடி பலங்கொண்டு விசுவாசத்தில் பூரணமாக நிற்க உதவுகிறது. அநேக உபத்திரவங்கள் மூலமாகவே நாம் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும். (யாக். 1:12; வெளி 3:19) Reprints Reference 1807:4 R1807

