5 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என் மேல் விழுந்தது. உரோமையருக்கு எழுதிய திருமுகம் 15:3
கிறிஸ்து அநேகரின் நிந்தனைகளை ஏற்றுக் கொண்டது போல துன்மார்க்கத்தில் ஜீவித்து, மனந்திரும்பி, தேவனையும் குமாரனையும் அறிந்தபின் கிறிஸ்துவின் நல்ல போர் வீரராகிய நாமும் அவர் நிந்தைகளில் பங்கு பெற வேண்டும். அவர் பூமியில் இருந்த போது தம்முடைய பாடுகளை சற்றும் கருதாது துன்மார்க்கரின் நடுவே நிந்தைகளையும், இகழ்ச்சிகளையும், துன்பங்களையும் சகித்து, பொறுமையுடனும், அன்புடனும் மற்றவர்களுக்காகச் சேவை செய்தார். அவரை வெறுத்தவர்களைக் குறித்து அவர் ஆச்சரியப்படவில்லை. இவ்வுலகத்தார் பகைப்பார்கள் என்பதையும் அறிந்திருந்தார். ஆகையால், அவர் நிந்தைகளûயும், அவமானங்களையும், குற்றச்சாட்டுகளையும் எதிர்ப்பார்த்திருந்தார். ஆனால் அவரது அன்பின் உள்ளம் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அன்புடனும் இரக்கத்துடனும் மற்றவர்களிடம் அக்கரை காட்டியது. (சங்: 69:6-13; பிலி. 2:3-5) Reprints Reference 1964:5 R1964

