23 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
சகோதரரே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன். கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 7:24
கடமை அல்லது ஊழியம் சில சந்தர்ப்பங்களில் மாறுபட்ட அபிப்பிராயத்தை கொடுப்பது போல காணப்படலாம். ஆகிலும் அது அப்படியல்ல. ஒரு கிறிஸ்தவனின் முதல் கடமை, சகல காரியத்திலும் சிருஷ்டிகரை முழு மனதுடன் அங்கீகரிப்பதேயாகும். இரண்டாவதாக ஒருவன் புருஷனும், தகப்பனுமாக இருந்தால், இவன் கடமை மனைவி பேரிலும், பிள்ளைகளின் பேரிலும் இருக்க வேண்டும். மனைவியும், தாயுமாக இருந்தால் இவள் கடமை புருஷன் பேரிலும், பிள்ளைகள் பேரிலும் இருக்க வேண்டும். தேவனுக்கு முன்பாக ஒருவன் நிலைத்திருக்க அவன் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரனாக ஜீவிக்க வேண்டும். அன்பிலே ஊழியம் செய்வதை தேவன் விரும்புகிறார். பேதுருவும் தீமைக்குத் தீமை செய்யாமல் நீங்கள் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கும்படி அழைக்கப்பட்டீர்களென்று அறிந்து ஆசீர்வதியுங்கள் என்றார். (1பேது. 3:9; கலா. 5:13-14) Reprints Reference 2488:3 R2488

