23 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
புல் உலர்ந்து, பூ உதிரும், நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் எசாயா 40:8
அழகிய புல் மற்றும் மலர்கள், வசந்த காலத்தில் துளிர்த்து பனிக்காலத்தில் செத்துப் போகின்றதாக நாம் காண்கின்றோம். பருவ காலங்கள் மாறுகையில் ஒவ்வொரு வருடமும் இது நிகழ்கிறது. ஆனால் தேவன், வேதம் என்ற அவருடைய புத்தகத்தில் நமக்குக் கொடுத்திருக்கும் வார்த்தைகள் ஒருபோதும் ஒழிவதோ (அல்லது) மாறப்போவதோ இல்லை. தேவன் எப்பொழுதும் மாறாதவராகவே இருக்கின்றார். அதாவது ஞானம், அன்பு, நீதி மற்றும் வல்லமையோடு இருந்து வருகிறார் - என்றென்றும் அவ்விதமாகவே இருப்பார். 1 பேதுரு 1:25.

