3 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
0:00 / …
இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் 5:17
ஜெபத்தில் உறுதியிலும், தெளிவிலும் நமது இயற்கையான சரிவு ஏதுவாயிருந்தாலும் நாம் வேதத்தின் போதனையை எடுத்துக் கொள்ள வேண்டும். நமது இயற்கையான பாரபட்ச குணத்தை வெற்றி கொள்ள, “ அன்பான சிறு குழந்தைகளைப்” போல பரத்திலிருந்து வருகிற புத்திமதியுடன் நமது எண்ணத்தையும், நடக்கையையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆகையால் நாம், “ கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்வீர்கள்” என்ற வசனத்தை நினைவு கூறுவோம். (யோவா. 16:24) கீழ்ப்படிதலும் உண்மையுமாயிருந்து கேட்கிற பிள்ளைகளுக்கு தேவன் தமது பண்டக சாலையில் திரளான இரக்கங்களையும் ஆசீர்வாதங்களையும் அருளையும் வைத்திருக்கிறார். (லூக். 18:1-8) Reprints Reference 2005:5 R2005

