4 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
யேகோவாவுக்கே காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, யேகோவாவுக்கு காத்திரு. திருப்பாடல்கள் 27:14
தேவ திட்டத்தில் காலங்கள் ஒரு முக்கியமான காரியமாகும். நாம் கேட்டவைகளைப் பெற தாமதமாகி, சோதனைகளினால் நாம் அதிகமாக துன்பப்படும் போது சோர்ந்து அதிருப்தி அடைதல் கூடாது. தேவன் உலக சிருஷ்டிப்பிலே குறித்த காலத்தின்படி மனுஷனை அதில் குடியேற்றினார். பாவத்திலே மனிதன் விழுந்த போது, இரட்சகரை உலகில் அனுப்பும் வரை குறித்த காலத்திற்கு தீங்கின் அனுபவத்தை பெற பூமியிலே வைத்தார். கிறிஸ்துவோடு மகிமையிலே ஆட்சி செய்ய, திருச்சபையை தேர்ந்தெடுக்க குறித்த காலத்தை வைத்திருக்கிறார். அவரது ஒவ்வொரு பிள்ளையும் சரியாக செதுக்கப்பட குறித்த காலம் கொடுக்கப்பட வேண்டும். ஏற்ற காலத்திலே, நம் ஜெபத்திற்கும் தாமதமின்றி பதிலளிப்பார். குருவியின் வீழ்கையை கவனிக்கிறவரும், நமது தலை முடியை எண்ணுகிறவருமாகிய அவர், தமது பிள்ளையின் சிறு வேண்டுதலையும் கவனியாதிரார். (புல. 3:25-26) Reprints Reference 1760:1. R1760

