25 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளைய தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும். மத்தேயு நற்செய்தியை 6:34
நாம் தேவனை நேசிக்கிறவர்களாக அவர் ஊழியத்திலே முழு மனதுடன் ஈடுபட்டு நீதிக்குரிய காரியங்களையும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவ ராஜ்யத்தையும் தேடுவோமேயாகில், வருங்காரியத்திற்குரிய காரியங்களில் நம் கவனத்தை செலுத்த அவசியமே இல்லை என்று இயேசு கூறினார். அவருடைய சீஷர்களை போல நமக்கு சோதனைகளும் உபத்திரவங்களும் உண்டு. ஆகிலும் நாம் அனுதினமும் நம் நேசர் பேரில் சார்ந்து, அவர் கைகளுக்குள்ளாக அடங்கி குறுகிய பாதையில் நடக்கப் பிரயாசப்பட வேண்டும். அந்தந்த நாளுக்கு அனுதினத்தின் பாடுகள் போதும். இந்த எல்லாப்பாடுகளிலும், அவர் வாக்குத்தத்தம் பண்ணின அவர் கிருபை நமக்குப் போதும். இதுவே நம் அனுதின மன்றாட்டாகவும் இருக்க வேண்டும். முதலாவது அவருடைய ராஜ்யத்தை தேடும்போது மற்ற யாவும் அவராலே கொடுக்கப்படுகிறது. (மத். 6:8) Reprints Reference 2260:4 R2260

