19 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
0:00 / …
உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுவதும் அது என் தியானம். திருப்பாடல்கள் 119:97
தேவனுடைய வார்த்தைகளை தியானிப்பது கிறிஸ்தவர்களின் தனி உரிமை. ஆகிலும் அநேக சந்தர்ப்பங்களில் சிலருக்கு இது எவ்வித பயனையும் கொடுப்பதாக இருப்பதில்லை. எப்படி என்றால் படித்தவைகளை இவர்கள் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தாவிடில் இது பிரயோஜனம் அற்றதாகிவிடும். தேவனுடைய பிள்ளைகள் தேவ திட்டத்தை அறிய எல்லா சந்தர்ப்பங்களையும் உபயோகித்து நாள் முழுவதும் அவ்வசனங்களில் தியானமாயிருக்க வேண்டும். இவ்வசனங்களை தியானிக்கிறவர்கள் இடறுவதில்லை. இவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு. இதை இரவும் பகலும் தியானிக்கிற மனுஷன் பாக்கியவான். (சங். 119:113, 163, 165) Reprints Reference 2488:3 R2488

