19 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
சமாதானத்தோடே படுத்துக் கொண்டு நித்திரை செய்வேன் கர்த்தாவே, நீர் ஒருவரே என்னை சுகமாய் தங்கப்பண்ணுகிறீர் திருப்பாடல்கள் 4:8
நாம் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்து, நம்மால் இயன்ற அளவு அவருடைய சித்தத்தை செய்யும்போது, நம்முடைய நன்மைக்கு ஏதவல்லாத எந்தக் காரியமும் நமக்கு சம்பவிக்க அவர் நமக்கு அனுமதிக்க மாட்டார் என்பதை அறிந்தவர்களாக ஒவ்வொரு இரவும் நாம் படுக்கைக்குச் செல்லமுடியும். இப்படியாக அவரது வழியில் நடக்கும்போது, தேவன் நம்மேல் அக்கறையாயும் அன்பாயுமிருக்கிறார் என்பது நமக்கு ஒரு அற்புதமான ஆசீர்வாதமாய் இருக்கும். யோவான் 14:27

