3 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
அவர் உத்திரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்நேரத்திலே தொங்க வைக்கிறார் யோபு 26:7
"வெற்றிடத்தில் வடபுறத்தை அவர் விரித்தார். காற்றிடையே உலகைத் தொங்க விட்டார்." (திருவிவிலியம்) வேதாகமம் உண்மை என நிரூபிக்கின்றது. இதோ, இங்கே அதற்கான ஒரு நல்ல உதாரணம் உள்ளது. பூமி அந்தரத்தில் தொங்குவதாகவும், இந்த பூமி சூரியனை வான்வெளி கோள் பாதையில் சுற்றி வருவதாகவும், நீண்ட நாட்களுக்கு முன்பதாகவே யோபு நமக்கு கூறியுள்ளார். வேதாகமம் அறிவியல் சம்பந்தமான காரியங்களைக் கூறுகின்றது, ஆனால், அவைகளை விவரிப்பதில்லை. இந்த கோணத்தில், கவிதை நடையில் விவரிக்கப்பட்ட இந்த வர்ணனை, சொல்லமுடியாத அளவுக்கு அழகுள்ளதாய் இருக்கின்றது. சங்கீதம் 104:5

