20 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 4:7
தேவனுடைய குமாரனில் நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலமாக, நாம் தேவனுக்கு விலையேறப் பெற்றவர்களாக மாறுகிறோம். வேறே எந்த நபரைப் பார்க்கிலும் அல்லது வல்லமையைப் பார்க்கிலும் அவருடைய கண்காணிப்பும் காத்துக் கொள்ளுதலும் பெரிதளவில் இருக்கின்றது. சர்வ வல்லமையுள்ள சிருஷ்டிகர் நம்மோடு இருக்கிறார் என்று அறிந்திருப்பதும், நமக்கு அத்தியாவசியமான தருணங்களில் நம்மை பாதுகாக்கிறார் என்பதும் ஆறுதலாய் இருக்கிறது. நம்முடைய இருதயங்களில் இருக்கும் இந்த சமாதானம், நம் பட்சத்தில் நாம் சாய்ந்திருப்பதிலிருந்து வராமல், தேவன் பட்சத்தில் சாய்ந்திருப்பதன் மூலம் வருக்கின்றது. இது கவலை மற்றும் பயத்திலிருந்து நம்மை விடுவிக்கின்றன. ஏசாயா 26:3.

