9 ஜூலைக்கான தினசரி வேத தியானம்
அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்ட பின்பு அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான். ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின் செல்லுகிறது. யோவான் நற்செய்தியை 10:4
ஒரு நல்ல மேய்ப்பனின் சத்தம் அநேக தொனிகளினால் இணைக்கப்பட்டுள்ளதால், அதைப் போன்ற சத்தத்தை வேறே ஒருவராலும் உண்டாக்க இயலாது. அவருடைய சத்தம் நீதி, அன்பு என்னும் நரம்புகளினால் இசைவாக இணைந்து ஞானம், வல்லமை என்ற நரம்புகளுடன் குரல் ஏற்றப்பட்டுள்ளது. பெரிய மேய்ப்பன், தன் குமாரன் மூலம் கொடுத்த இந்த இனிமையான வார்த்தைகளைப் போல இவ்வுலகின் மக்களோ, சாத்தானோ கொடுக்க முடியாது. மேலும் உண்மையான ஆடுகள் நல்ல மேய்ப்பனின் சத்தத்தை அறிந்திருக்கிறபடியால் அவைகளுக்குச் செவி கொடுத்து அதன்படி நடக்கும். இவைகள் ஒரு போதும் அன்னியச் சத்தத்திற்குத் தங்கள் செவிகளைச் சாய்க்காமல் தீங்குக்கு விலகி இருக்கும். மேலும் “கர்த்தர் என் மேய்ப்பர்; அவரே எனக்கு போதுமானவர்” என்று சொல்லுவார்கள். (யோவா.10:8-15) Reprints Reference 2672:5 R2672

