14 ஜூலைக்கான தினசரி வேத தியானம்
சகல விதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்றெந்த துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது. எபேசியருக்கு எழுதிய திருமுகம் 4:31
இந்தக் காரியங்களைக் குறித்துச் சிந்திக்கும் போது கிறிஸ்தவ ஜீவியம் செய்பவருக்கு தேவனுடைய பார்வையில் ஒருவரை வெறுப்பது என்பது கொலை என்றும், அவதூறு பேசுவது என்பது வஞ்சகம் செய்து கொலை செய்வதாகவும், அயலானை தூμப்பது என்பது கொள்ளையிடுவதற்கு ஒப்பாகவும் இருக்கிறபடியால், தேவனுடைய பிள்ளைகள் இவைகளை நடப்பிப்பது அதிக தீமையானது ஆகும். “ஒருவனையும் தூஷியாதே” என்ற வார்த்தை, இவர்கள் உள்ளத்தின் நினைவாக இருக்க வேண்டும். மாயமற்ற அன்பும், இரக்கமும், மனத்தாழ்மையுமே நம் இருதயத்தில் நிறைந்திருக்க வேண்டும். இவைகளினாலே ஒருவன் எச்சரிக்கப்படாதிருந்தால் அவன் தன்னைத்தான் வேதனைக்கு உட்படுத்தி பாவத்தில் விழ ஏதுவாகும். (எபி. 12:11-17) Reprints Reference 2444:6; 2445:1 R2445

