15 ஜூலைக்கான தினசரி வேத தியானம்
எனக்குண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும் ..... அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 13:3
தேவ ஊழியத்தில் ஈடுபடுகிற நாம் பணத்தின் மூலம் காரியங்களை நிறைவேற்ற முடியும் என்று நினைப்பது மிகவும் தவறானது ஆகும். அன்பும் மன இரக்கமுமே மிக முக்கியமானது. நம் இரட்சகரான இயேசு இந்தக் குணலட்சணத்தை உடையவராக இருந்தார். அவர் இருதயம் அன்பினாலே நிறைந்து மிகத் தாழ்ந்தவரிடமும் தன் அன்பைக் காட்டி அவர்களோடு பழகினார். இந்த அன்பை மரியாளிடமும் காட்டி அவள் அன்பைப் பெற்றார். (அன்பு திரளான பாவங்களை மூடும். அன்பில்லாதவன் தேவனையுடையவனல்ல. தேவன் அன்பாகவே இருக்கிறார். நம்முடைய இரட்சகர் நமக்காகத் தன் ஜீவனைக் கொடுத்ததினால் அன்பு இன்னதென்று நாமும் அறிந்திருக்கிறோம். தன் சகோதரினிடம் ஒருவன் காட்டும் அன்பு இவ்விதம் இருக்க வேண்டும். இது நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதல்). (1 கொரி. 13:4-13) Reprints Reference 2448:3 R2448

