26 ஜூலைக்கான தினசரி வேத தியானம்
ஜெயங் கொள்ளுகிறவனுக்கு ...... அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின் மேல் எழுதப்பட்டதும், அதைப் பெறுகிறவனேயன்றி, வேறொருவனும் அறியக் கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன். யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு 2:17
ஜெயங்கொள்ளுகிறவன் சகலத்தையும் கிறிஸ்துவுக்காக அர்ப்பணிக்க வேண்டும். கிறிஸ்துவின் அன்பைப் பெற்று அவரில் நிலைத்திருக்க இது அவசியமானது. இப்படிப்பட்ட பரீட்சை, நாளுக்கு நாள் அவருடையவர்களுக்கு அதிகரித்து, உலகத்தை முற்றிலும் வெறுக்கச் செய்து, பரலோக வாஞ்சையை அதிகரிக்கும். மேலும் தங்களை தேவனுக்கென்று தத்தம் செய்த ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட சோதனைகள் தங்களுக்கு வரும் என்று அறிந்து கொள்ள வேண்டும். உலகமும் அதன் ஆசை, இச்சைகள் யாவும் முற்றிலும் சிலுவையில் அறையப்பட்டு, இவைகளில் வெற்றி காண்பதே, அவர் பேரில் நாம் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தும். (1 கொரி. 15:57-58; வெளி.3:12) Reprints Reference 2480:6 R2480

