21 ஜூலைக்கான தினசரி வேத தியானம்
இதற்காகவே, இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான். யோவான் நற்செய்தியை 18:37
நம் இரட்சகர் சத்தியத்தின் மேல் கொண்டிருந்த விசுவாசமே, சாத்தானால் குருடராக்கப்பட்டவர்கள் அவர் பேரில் பொறாமை கொள்ளச் செய்தது. அவர் சத்தியத்திற்குச் சாட்சி கொடுத்ததினால், தன் ஜீவனையும் இழக்க நேர்ந்தது. இதே போல அவரைப் பின்பற்றும் ஒவ்வொருவரும், சத்தியத்திற்காகச் சாட்சி கொடுக்க வேண்டியவர்களாகவே அழைக்கப்பட்டுள்ளனர். தேவனையும், அவர் திட்டங்களையும் குறித்துச் சாட்சி சொல்பவர்கள், கிறிஸ்துவைப் போல தங்களை ஜீவ பலியாக ஒப்புக் கொடுத்து, அது பரிசுத்தமுள்ள பலியாக தேவனால் அங்கீகரிக்கப்பட வேண்டும். கிறிஸ்துவுடன் ஆட்சி புரிய விரும்பும் ஒவ்வொருவரும், அவர் சத்தத்தைக் கேட்டு ராஜ்ய ஊழியத்தில் ஈடுபடுவது அவசியமானது. (யோவா. 17:11-20) Reprints Reference 2471:6 R2471

