31 ஜூலைக்கான தினசரி வேத தியானம்
0:00 / …
அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும். கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 3:13
இங்கு அப்போஸ்தலன், ஒரு கிறிஸ்தவனின் விசுவாசத்தையும், அவன் கிரியைகளையும், பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல் முதலியவைகளால் கட்டப்பட்ட வீட்டிற்கு ஒப்பாகவும், இவைகளைச் சோதித்தறியும் அக்கினி தற்கால சோதனைகள் என்றும் ஒப்பிட்டுப் பேசுகிறார். இக்காலத்து சோதனைகளில் நிலைத்திருப்பவர்களே, அந்த அக்கினிக்கு இரையாகாமல் இருப்பார்கள். இத்தகைய மேன்மையான விசுவாசம், காளானைப் போல ஒரே நாளில் உண்டாகாமல் ஒலிவ மரம் உறுதியாக்கப்படுவது போல படிப்படியாக, நீண்டகாலம் வளர்ச்சியடைவதாகும். (மல்கி.3:1-3) Reprints Reference 2496:5 R2496

