17 ஜூலைக்கான தினசரி வேத தியானம்
உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக் கொள்வீர். எசாயா 26:3
இந்தச் சமாதானம் உலகம் தரும் சமாதானம் அல்ல. தற்காலிகமானதும் அல்ல, தன்னலமுள்ளதுமல்ல. இது தேவப்பிள்ளைகளுக்குக் கிறிஸ்துவின் மூலம் அருளப்பட்ட சமாதானம் ஆகும். மேலும், என் சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன் என்றார். இந்த தேவ சமாதானம், கிறிஸ்துவின் மூலம் சிலருக்கு எக்காலத்திலும், சில நிபந்தனைகளின் பேரில் கொடுக்கப்பட்டுள்ளது. விசுவாசிகள் தேவ ஞானத்தையும், அன்பையும், நீதியையும், வல்லமையையும் உணர்ந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளைக் கிருபையாய் நினைவு கூறும் சமாதானம். தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாய் இருக்கும்படிக்கு விசுவாசத்தின் மூலம் இது அருளப்பட்டது. கிறிஸ்துவின் மூலம் தேவன் பேரில் பற்றுதலாய் நடப்பவர்களுக்கு இக்காலத்து பாடுகள், கண்ணீர்கள் யாவும் பிற்கால மகிமையை தரப்போகிறது என்ற நம்பிக்கையின் சமாதானத்தைப் பூரணமாகப் பெற்றிருப்பார்கள். (ஏசா. 48:17-19; ரோம. 5:1-5) Reprints Reference 2456:6 R2456

