17 ஜூலைக்கான தினசரி வேத தியானம்
கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை சிட்சிக்கிறார் நீதிமொழிகள் 3:12
நல்ல பெற்றோர் தங்கள் குழந்தைகள் தவறு செய்யும்போது, சிட்சித்து சரியானது எது என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள். தேவனும் தம்முடைய பிள்ளைகளை நேசிக்கிறபடியால் அவர் நம்மை சிட்சித்து சரியானது இன்னது என்பதை நமக்கு காண்பித்து, அதை நிறைவேற்ற அல்லது அதை செய்ய நமக்கு உதவி செய்கிறார். நாம் தவறு செய்யும்போது, அடிக்கடி நாம் நமக்கு நாமே துன்பங்களை வருவித்துக் கொள்ளக்கூடும். சில சமயங்களில் அது மற்றவர்களுக்கும் துன்பங்களை ஏற்படுத்தும். உபாகமம் 8:5.

