12 ஜூலைக்கான தினசரி வேத தியானம்
ஆகையால், குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். யோவான் நற்செய்தியை 8:36
உண்மை சீஷனாக இருப்பவர்கள் கிறிஸ்துவின் போதகங்களைக் கேட்டு அவைகளிலே நிலைத்திருக்கும் போது அறியாமையிலும், மூட பக்தியிலிருந்தும் விடுதலை பெற்றவனாக மட்டுமல்ல, பாவ செய்கைகளிலுமிருந்து விடுதலை பெறுகிறார்கள். தேவ சித்தத்தை, சத்தியத்தின் மூலம் இவர்கள் அறிந்திருக்கிறதினால் தங்கள் பெலவீனங்களை உணருவார்கள். இதனால் இவர்களுடைய விடுதலை இவர்களுக்கு ஆசீர்வாதமாகவே காணப்படுமேயல்லாமல் ஒருபோதும் இடையூறை வருவிக்காது. இவர்கள் தங்களைக் குறித்து பெருமை பாராட்டாமல் மனத்தாழ்மையுள்ளவர்களாயிருப்பார்கள். கோபங்கொள்ளமல் பொறுமையாயிருப்பார்கள். தன்னிச்சை உள்ளவர்களாயிராமல் உதார குணமுள்ளவர்களுமாயிருப்பார்கள். கசப்பும், அதிருப்தியும் உள்ளவர்களுமாயிராமல் சந்தோஷமும் சமாதானமுமாயிருப்பார்கள். உண்மையாக தேவனுடைய குமாரனே நம்மை சகல இக்கட்டுகளிலிருந்தும் நீக்கி விடுதலையைக் கட்டளையிடுவார். (கலா. 3:26-29; கொலோ. 3:11-15) Reprints Reference 2440:2 R2440

