12 ஜூலைக்கான தினசரி வேத தியானம்
அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் தேவவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்தார்கள் திருத்தூதர் பணிகள் 17:11
பெரோயா பட்டணத்து சகோதரர்கள், பவுலும், சீலாவும் தங்களுக்கு போதிக்கும் சத்தியம் உண்மையுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அநுதினமும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்ப்பதில் ஞானம் உள்ளவர்களாய் இருந்தனர். இது நமக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. வேதத்தை ஆராய்ந்து பார்ப்பதன் மூலமாக, ஒவ்வொரு ஆராய்ச்சிப் பொருளைக் குறித்தும் தேவன் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை மட்டுமே நாம் சத்தியமாக அங்கீகரிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். சங்கீதம் 34:16.

