11 ஜூலைக்கான தினசரி வேத தியானம்
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம். தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான். யோவான் எழுதிய முதல் திருமுகம் 5:18
நம்முடைய இருதயம் (புத்தியும் சித்தமும்) தேவனுக்கு ஏற்றதாகவும், நீதியுள்ளதாகவும், பரிசுத்தமுள்ளதாகவும் இருக்கும் போது, புதிய சிந்தையுள்ளவர்களிடையே பாவம் சற்றும் காணப்படாமல் எப்போதும் அதை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் ஜெனிப்பிக்கப்பட்ட இவர்களிடையே பரிசுத்தாவியே தொடர்ந்து வளரும். இவர்கள் விழுந்துபோன மனிதனின் பல இச்சைகளை எதிர்த்து அநேக போர் புரிய வேண்டியவர்களாயிருக்கின்றனர். புதிய சிருஷ்டிகளான இவர்கள் உலகத்தினின்று பிரிக்கப்பட்டு மாமிச இச்சைகளுக்கும் பலவீனங்களுக்கும் கிறிஸ்து இயேசுவின் மூலம் விலக்கப்பட்டிருக்கிறார்கள். கிறிஸ்துவின் ஈடுபலியின் மூலம் பாதுகாக்கபட்டுள்ளனர். (எபி. 6:4-6; 1யோவா. 3:7-10; 2பேது. 2:20-21) Reprints Reference 2440:4 :6 R2440

