11 ஜூலைக்கான தினசரி வேத தியானம்
மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்: நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார் மீக்கா 6:8
கர்த்தரோடு நிலைத்து நிற்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்த குணாதிசயங்கள் தேவையான ஒன்றாகும். மேலும் இவைகள் பிரமாணத்தின் சுருக்கமாக இருக்கிறது. இந்த அறிக்கை இஸ்ரயேலருக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. இதற்குள்ளாக, எல்லா கட்டளைகளையும் கர்த்தர் அடக்கியுள்ளார். ஆயிரவருட யுக முடிவில், இந்த ஒட்டு மொத்த மனுக்குலமும் இதே நிலைப்பாட்டுக்கு தங்களை உட்படுத்தி வாழ வேண்டியது அவசியமானதாக இருக்கும். பிலிப்பியர் 4:8-9.

