15 ஜூலைக்கான தினசரி வேத தியானம்
நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார் யோவான் நற்செய்தியை 11:11
மரணம் என்பது, தூங்குவதற்கு ஒத்த விஷயம் போன்ற காரியம் என்று இயேசு தம்முடைய நண்பர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தார். இரவில் உறக்கத்திற்கு செல்லும்போது, மறுநாள் காலை விழித்துவிடுவோம் என்று நாம் எதிர்ப்பார்ப்பது போன்று, ஆயிரவருட யுகத்தின் காலை வேளையில் மரணமாகிய உறக்கத்திலிருந்து எழுப்பப்படுவதை நாம் எதிர்ப்பார்க்கிறோம். ஏற்றக்காலத்தில் மரணமாகிய நித்திரையிலிருந்து அனைவரும் எழுப்பப்படுவார்கள். ஏனெனில், கீழ்ப்படியாமையின் மூலமாக ஆதாம் இழந்துபோன ஜீவனுக்கு ஈட்டுத்தொகையாக இயேசு தம் ஜீவனைக் கொடுத்தார். தானியேல் 12:2.

