8 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பாருங்கள். உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மை செய்ய நாடுங்கள். தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் 5:15
ஒரு கிறிஸ்தவ ஜீவியத்தில் திருச்சபையாராக இருக்க அழைக்கப்பட்டோர் மற்ற உலக மக்களை விட சாந்தமான குணமுடையவர்களாகவும், அதிக சுத்தமுள்ளவர்களாகவும், அமைதலுள்ளவர்களாகவும், இரக்க குணமுள்ளவர்களாகவும், அன்புள்ளவர்களாகவும் இருத்தல் வேண்டும். இவையாவும், இவர்களுள் உலகத்தாருக்கொப்பாக வெளி வேஷமாகக் காணப்படாமல், இவையாவும் உள்ளான இருதயத்திலிருந்து வரக்கூடியதாக இருக்க வேண்டும். இது தேவன் அங்கீகரிக்கத்தக்கதாக தேவ ஆவியினால் நிறைந்து சத்தியம், அன்பு, நீதி ஆகியவை நிறைந்ததாகக் காணப்பட வேண்டும். நம் இரட்சகரும் பூமியிலே, தமக்குத் தீங்கு செய்த யாவருக்கும் நன்மையானதைச் செய்து தீங்கு அனுபவித்தாரே. (மத். 5:39; ரோம. 2:17; 1 பேது. 3:9-11) Reprints Reference 2879:3 R2879

