16 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள். உரோமையருக்கு எழுதிய திருமுகம் 12:12
தேவனுடைய பிள்ளைகளுக்கு இது எவ்வளவு பெரிதான சிலாக்கியம். இவர்கள் தேவனை எந்நேரத்திலும் , எந்த இடத்திலும் அவருடைய குமாரன் மூலம் ஜெபித்து அவர் நம்மோடு இருக்கிறார் என்றும், நமக்கு பதிலளிக்கிறார் என்றும், நம் இருதயங்களில் விசுவாசித்தல் அவசியமானது. அவருடைய பார்வையிலே ஒரு நாள் வேலையை செய்து முடித்து அவருடன் நெருங்கி சம்பாஷனையிலே ஈடுபடுவது எவ்வளவு மேலான சிலாக்கியம். இதன் மூலம் நம் சகல பாரங்களையும் அவரிடம் ஒப்படைக்கிறோம். ஆகிலும் உண்மையாக ஒருவர் தேவனை அறியாமலும், அவருடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளாமலும் ஜீவித்து ஜெபிப்பார்களானால் இவர்கள் ஜெபம் கேட்கப்படமாட்டாது. கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது. அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்கு கவனமாயிருக்கிறது. (நீதி. 28:9; 1 பேது. 3:12) Reprints Reference 1866:1 R1866

