28 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவ புத்தகத்திலிருந்து அவனது நாமத்தை நான் கிறுக்கிப் போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன். யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு 3:5
உண்மை விசுவாசிகள் பாவத்தை மேற்கொண்டு விழிப்புள்ளவர்களாக உலக வழிகளிலே தங்களைக் காத்து, தங்கள் வஸ்திரங்களை கறைபடுத்தாது காத்துக் கொள்வர். பாவம் தங்களை கறைப்படுத்தி கிறிஸ்துவினிடமிருந்து தங்களை விலகிப் போக ஏதுவில்லாமல் அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் தங்களுடைய வஸ்திரங்களை அவ்வப்போது சுத்திகரித்துக் கொள்வார்கள். இவர்கள் பாவத்தை வெறுத்து, தங்கள் வஸ்திரங்களை கறைப்படுத்தாமல் காத்துக் கொள்வதால் பொல்லாங்கன் இவர்களை அணுகமாட்டான். இவை யாவும் இவர்கள் தங்கள் சித்தத்தை முழுவதும் கிறிஸ்துவின் சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களாக ஜீவிப்பதால், இவர்கள் பாவத்தை நடப்பிக்க மாட்டார்கள். (வெளி 2:7; 13:8 ) Reprints Reference 2161:1 R2161

