28 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
தேவன் இல்லையென்று மதிக்கெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான் திருப்பாடல்கள் 14:1
காரணக்காரியத்தின் கண்ணோட்டத்திலிருந்து மட்டும், நாம் சிருஷ்டிப்பின் பிரமாண்டத்தையும், அதன் அழகையும், ஒழுங்கையும், இசைவையும், சரிசமானத்தையும், அளவையும் வெவ்வேறு தன்மைகளையும் கவனிக்கையில், சிருஷ்டிகரைக் குறித்து நாம் சந்தேகிக்க முடியுமோ? காரணியின் காரணமாக விளைவுகள் உருவாகின்றது. இயற்கையின் இசைவும், ஒருமைப்பாடும் தற்செயலாக நிகழ்ந்தது என கற்பிக்கும் அறிவாற்றல் உள்ளவர்களும், மனிதனின் திறமையைக் குறித்து பெருமை பாராட்டிக்கொண்டிருப்பவர்களும் எவ்வளவு குறுகிய புத்தியோடு காணப்படுகின்றனர். தேவனுடைய கைவேலைப்பாட்டுக்குரிய நிரூபணங்கள் அனைத்தும் நம்மை சூழ்ந்து இருக்கிறது. சங்கீதம் 139:14.

