1 ஜூலைக்கான தினசரி வேத தியானம்
வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து கொள்ளுங்கள். ... கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப் பாருங்கள். எபேசியருக்கு எழுதிய திருமுகம் 5:8, 10
சத்தியத்தின் மூலமாக தேவனுக்கு பரிசுத்தமுள்ளவர்களாக நாம் இருப்போமேயானால் நம் சுயசித்ததிற்கு நாம் மரித்தவர்களாக இருந்து தேவசித்தத்தை வார்த்தையிலும் செய்கையிலும், சிந்தனையிலும் முற்றிலுமாக நாம் அங்கீகரித்தவர்களுமாக ஜீவிப்போம். இதன் மூலம் நாம் சகலத்தையும் மேற்கொண்டுதேவ சித்தத்தை நிறைவேற்றும் போது சத்தியத்தின் நிமித்தம் நாம் இரத்த சாட்சிகளாக மரிக்காதிருந்தாலும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசை பெறுவோம். “நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது” என்ற இந்த வார்த்தையை நாம் எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த சத்தியவார்த்தை ஒருவருக்கும் மறைபொருளாய் இருக்க வேண்டாம். இது நம் ஜீவனின் பாதையை போதித்து காட்டி தேவ சித்தம் நம் சித்தமாக இருக்கச் செய்கிறது. (எபே. 2:10-13; ரோம. 12:2) Reprints Reference 2412:2 R2412

