1 ஜூலைக்கான தினசரி வேத தியானம்
நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம் தொடக்க நூல் 2:17
இந்த விசேஷமான மரத்தின் கனியை புசிக்கவேண்டாம் என தேவன், ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கட்டளை கொடுத்தபோது, அவர் அவர்களுடைய கீழ்ப்படிதலை சோதித்துக் கொண்டிருந்தார். அந்த கனி, தாமே அவர்களுக்கு நன்மை தீமையை அற்புதமான விதத்தில் கற்றுக்கொடுக்கவில்லை. ஆனால் புசிக்க வேண்டாம் என விலக்கப்பட்டிருந்தது எதுவோ அதை புசித்ததின் மூலமாக, தேவனுக்கு கீழ்ப்படியாமல் போன அந்த செய்கையினாலே, தீமைக்கும் அதின் விளைவுகளுக்கும் அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. ஆதியாகமம் 3:3.

