6 ஜூலைக்கான தினசரி வேத தியானம்
யேகோவாவுக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்து கொள்ளும் வழியைப் போதிப்பார். திருப்பாடல்கள் 25:12
நமக்கு வரக்கூடிய உபத்திரவங்களையும், பல கஷ்டங்களையும் ஆராய்வது நம்முடைய காரியமல்ல. நாம் நம்மை தேவனுக்கென்று அர்ப்பணித்த பிறகு, சகலத்தையும் கிறிஸ்துவின் கரத்திற்கு ஒப்புக் கொடுத்து, அவர் நடத்துதலுக்காகக் காத்திருக்க வேண்டியவர்களாகவே இருக்கிறோம். இதன் மூலமே, நம் ப-யின் ஜீவியத்தை நாம் உறுதிப்படுத்துகிறோம். தேவனுடைய பார்வையில் சிலருக்கு ஒருவரை விட அதிகமான சிட்சைகள் அவசியமாகக் காணப்படலாம். ஏனெனில், இதன் மூலம் அவர்கள் பலியின் ஜீவியம் பரீட்சிக்கப்பட்டு அவர்களுடைய ஊழியம் உயர்த்தப்படலாம். ஆகவே தான் அப்போஸ்தலன் சொன்னபடி, காணப்படாதவைகளை நோக்கி இருக்கிற நமக்கு அதி சீக்கிரத்தில் நீங்கும் லேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கன மகிமையை உண்டாக்குகிறது என்ற வார்த்தைகளின்படி நம்முடைய வைராக்கியமும் பலியும் இருக்க வேண்டும். (1 தெச.3:2-4; 1 கொரி. 10:13; 2 கொரி. 4:17) Reprints Reference 2416 R2416

