6 ஜூலைக்கான தினசரி வேத தியானம்
சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வனே கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 11:14
ஜனங்களை வஞ்சிக்கவும், தேவனிடத்திலிருந்து அவர்களை பிரித்து நடத்தவும் சாத்தான் அநேக வேறுபட்ட வழிகளை உபயோகித்து வருகிறான். அவன் கையாண்டுவரும் ஒருமுறை என்னவெனில், அவன் தன்னை தேவன்போல் காண்பித்து, தேவனிடத்திலிருந்து சத்தியத்தையும் வெளிச்சத்தையும் கொண்டுவருவதுபோல் பாசாங்கு செய்து கொண்டிருக்கிறான். உண்மையில் பார்க்கும்போது, அவன் தப்பறைகளையும் இருளையுமே கொண்டு வருகிறான். யோவான் 8:44.

