13 ஜூலைக்கான தினசரி வேத தியானம்
சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக் கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக் கொண்டால் அது ஆச்சரியமல்லவே. கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 11:14, 15
சாத்தான் எவ்விதம் ஒரு நல்ல காரியத்தைச் செய்ய உற்சாகமுள்ளவனாக இருப்பான்? என்ற கேள்விக்கு நாம் விடை கூற வேண்டுமானால், இவன் ஒளியின் தூதனின் வேஷத்தை தரித்துக் கொண்டு வேதாகம சத்தியங்கள் அறியும்படியும் அல்ல, கிறிஸ்துவின் சிலுவை அண்டையிலும் அல்ல, ஆனால், இவைகளுக்கு மாறாக வேறொரு இரட்சிப்பின் திட்டத்தை கள்ளப் போதகர்களிடம் பெற்றுக் கொள்ள வழி நடத்துவான். கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பான். நம் இரட்சகர் உரைத்த வார்த்தைகளின்படி சாத்தானை சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாக பிரிவினை செய்தால், அவன் ராஜ்யம் எப்படி நிலை நிற்கும். இதுவே அவன் இறுதி வீழ்ச்சி என்று அறிகிறோம். (மத். 12:23- 28; 2 தெச. 2:3-4) Reprints Reference 2669:6 R2669

