28 ஜூலைக்கான தினசரி வேத தியானம்
நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால், பாக்கிவான்களாயிருப்பீர்கள். பேதுரு எழுதிய முதல் திருமுகம் 3:14
தேவனுக்குப் பிரியமாயிருக்க விரும்பி சத்தியத்தைக் கைக்கொண்டு நடக்கும் போது, அநேகரால் வெறுக்கப்படுவோம். இதனால் மட்டுமே நாம் நீதியினிமித்தம் துன்பப்படுகிறோம் என்று எண்ண வாய்ப்புண்டு. அப்போஸ்தலன் இங்கே குறிப்பிடுவது போல சிலர் தீமையானதை செய்து துன்பப்படலாம். சிலர் மற்றவர்களின் காரியங்களைப் பேசி புறங்கூறி, ஞானமாய் நடவாமல் தேவ புத்திமதிகளைக் கவனியாமல் நடந்து, பாடுகளை உலகப் பிரகாரமாக அனுபவிக்கலாம். இது நீதியினிமித்தமான பாடுகள் அல்ல. நாம் தேவ சித்தத்தை அறிந்தவர்களாக மட்டுமல்ல. நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும், சூழ்நிலைக்கு தக்கதாக தெய்வீக அங்கீகரிப்புக்குரியதா என்றும் உணர்ந்து செய்ய வேண்டும். இதன் மூலம் நமக்குச் சில கஷ்ட நஷ்டங்கள் ஏற்படினும், அவருடைய நடத்துதலுக்காக பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். (1 பேது. 2:19-23; மத். 5:11-12) Reprints Reference 2493:3,6 R2493

